ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் பயிற்சி

புதுச்சத்திரத்தில் வட்டார வள மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-12-02 13:38 GMT

புதுச்சத்திரத்தில் வட்டார வள மையம் சார்பில் ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் பயிற்சி அளிக்கப்பட்டது.  

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேந்தமங்கலம், டிச. 2 சேந்தமங்கலம் அடுத்த புதுச்சத்திரம் ஒன்றியத்தில் வட்டார வள மையம் சார்பில் 9,10ம் வகுப்பு கையாளும் ஆசிரியர்களுக்கு கற்றல் விளைவுகள் சார்ந்த பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சியை வட்டார வள மைய மேற்பார்வையாளர் மகேஸ்வரி துவக்கி வைத்தார். பயிற்சியில் கடினமான பாடங்களை எளிமையான முறையில் படம் கற்பித்தல் குறித்தும், மெல்ல மலரும் குழந்தைகளுக்கு எளிமையான முறையில் படம் கற்பித்தல் குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது. பயிற்சிக்கு கருத்தாளர்களாக பட்டதாரி ஆசிரியர்கள் பரத்குமார், விஜய பாரதி, வளர்மதி, விஜயராணி, பிரியா, வாணிஸ்ரீ, சரவணன், இளங்கதீர், ரத்தினம், ராஜா ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர். பயிற்சியை புதுச்சத்திரம் வட்டார கல்வி அலுவலர்கள் சந்திரசேகரன், சுப்பிரமணியம் பார்வையிட்டனர்.

பயிற்சியில் 77 உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

 

Tags:    

Similar News