சமரச மையம் சார்பில் விழுப்புரம் நீதிமன்றத்தில் சட்ட கருத்தரங்கம்

விழுப்புரம் நீதிமன்றத்தில் மாவட்ட சமரச மையத்தின் சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Update: 2024-03-28 16:13 GMT

கருத்தரங்கம்

விழுப்புரம் நீதிமன்றத்தில் மாவட்ட சமரச மையத்தின் சார்பில் வெற்றிகரமான மத்தியஸ்த்திற்கான அணுகுமுறை என்ற தலைப்பில் சட்ட கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா தலைமை தாங்கி தொடக்க உரையாற்றினார். மோட்டார் வாகன வழக்குகள் சிறப்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி வெங்கடேசன் அனைவரையும் வரவேற்றார்.

முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சுபத்ரா, சமரச வக்கீல் ஜெயராம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு மத்தியஸ்தம் மற்றும் சமரச மைய மூத்த வக்கீல் அருணாச்சலம் கலந்துகொண்டு, வெற்றிகரமான மத்தியஸ்த்திற்கான அணுகுமுறை குறித்து பயிற்சி வழங்கினார். வக்கீல்கள் சங்க தலைவர்கள் தயானந்தம், காளிதாஸ், பன்னீர்செல்வம், நீலமேகவண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இக்கருத்தரங்கில் சமரசர்கள், வக்கீல்கள், அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் மோட்டார் வாகன வழக்குகள் சிறப்பு சார்பு நீதி மன்ற நீதிபதி பிரபாதாமஸ் நன்றி கூறினார். கருத்தரங்கிற்கான ஏற்பாட்டை மாவட்ட சமரச மைய செயலாளர் ஜெயப்பிரகாஷ் செய்திருந்தார்.

Tags:    

Similar News