சட்டப்பேரவை அரசு உறுதிமொழி குழு ஆய்வுக்கூட்டம் - எம்.எல்.ஏ பங்கேற்பு
வேலூர் மாவட்டத்தில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை அரசு உறுதிமொழி குழுவின் ஆய்வு கூட்டத்தில் நாமக்கல் எம்எல்ஏ ராமலிங்கம் பங்கேற்றார்.
வேலூர் மாவட்டத்திற்காக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் அரசின் சார்பில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் அதன் தலைவர் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் வேலூர் மாவட்டம் முழுக்க நடைபெற்று வரும் உறுதிமொழிகள் குறித்தான பணிகளை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். இதில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் கலந்துகொண்டார். அதன் பின்னர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி முன்னிலையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்திற்கு சட்டமன்ற உறுதிமொழிக் குழுத் தலைவர் வேல்முருகன் தலைமை வகித்தார்,
அப்போது சமூகநலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் மோகன் எம்எல்ஏ (அண்ணா நகர்), அருள் எம்எல்ஏ (சேலம் மேற்கு), ஜெயக்குமார் எம்எல்ஏ (பெருந்துறை), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, கோட்டாச்சியர் கவிதா சட்டமன்ற துணைச் செயலாளர் ரவி, இணைச் செயலாளர் கருணாநிதி மற்றும் வேலூர் மாவட்ட அனைத்து துறை அரசு அலுவலர்கள், சட்டப்பேரவை அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.