தர்மபுரி உழவர் சந்தையில் எலுமிச்சை விலை உயர்வு
கோடை வெப்பம் அதிகரித்து வருவதன் காரணமாக தர்மபுரி உழவர் சந்தையில் எலுமிச்சை பழத்தின் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ எலுமிச்சை பழம் 168 ரூபாய்க்கு விற்பனையானது.;
Update: 2024-04-30 02:05 GMT
எலுமிச்சை
தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் எலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது. இதேபோல் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது கோடை வெயில் அதிக ரித்து வரும் நிலையில் எலுமிச்சை பழத்தின் பயன்பாடு வழக்கத்தை விட அதிகரித்துள்ளது.
இதனால் சந்தையில் அதன் தேவையும் அதிகரித்து வரு கிறது. இதன் காரணமாக கடந்த சில வாரங்களாக எலுமிச்சை பழத்தின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.தர்மபுரி உழவர் சந்தையில் கடந்த சில நாட்களாக எலுமிச்சை பழத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்று ஒரு கிலோ 158 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. இது நேற்று கிலோ 168 ரூபாய் ஆக அதிகரித்தது. வெளி மார்க்கெட்டுகளில் கிலோ 180 ரூபாய் வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.