டாப்செட்கோ மூலம் கடன் வழங்கும் முகாம் - ஆட்சியர் தகவல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த மக்களுக்கு டாப்செட்கோ மூலம் கடன் வழங்கும் முகாம் 02.07.2024 முதல் 15.07.2024 வரை நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-25 07:33 GMT

ஆட்சியர் ஜெயசீலன் 

விருதுநகர் மாவட்டம், பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார முன்னேற்றத்திற்காக சாத்தியக் கூறுள்ள சிறு தொழில்கள் மற்றும் வியாபாரம் செய்ய பொது காலக் கடன், பெண்களுக்கான புதிய பொற்காலக் கடன், பெண்களுக்கான நுண்கடன், ஆண்களுக்கான நுண்கடன் மற்றும் கறவை மாடுக் கடன் ஆகிய கடன் திட்டங்களுக்கு தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் கடனுதவி வழங்கி வருகிறது.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் அனைத்து மாவட்ட மத்திய மற்றும் நகர கூட்டுறவு வங்கி கிளைகளிலும் கடன் விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் கடன் விண்ணப்பப் படிவங்களை பூர்த்தி செய்து சாதி, வருமானம் மற்றும் பிறப்பிடச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை மற்றும் வங்கி கோரும் ஆவண நகல்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளில் ஒப்படைக்க வேண்டும்.

எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினைச் சார்ந்த தனி நபர்கள் மற்றும் குழுக்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமர்ப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.       இக்கடன் திட்டங்கள் தொடர்பான விவரங்களையும் சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொள்ளவும் கடன் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கவும் ஏதுவாக 2024-2025-ம் நிதியாண்டிற்கான கடன் வழங்கும் முகாம் (லோன் மேளா) வட்ட அளவில் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

அதன்படி 02.07.2024 அன்று விருதுநகர் வட்டாட்சியர் அலுவலத்திலும், 03.07.2024-அன்று காரியாபட்டி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 04.07.2024-அன்று அருப்புக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 05.07.2024-அன்று திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 08.07.2024-அன்று சிவகாசி வட்டாட்சியர் அலுவலகத்திலும், 09.07.2024-அன்று இராஜபாளையம்  வட்டாட்சியர் அலுவலகத்திலும்,  10.07.2024-அன்று ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டாட்சியர அலுவலகத்திலும், 11.07.2024-அன்று சாத்தூர்  வட்டாட்சியர் அலுவலகத்திலும்;, 12.07.2024-அன்று வெம்பக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலும், 15.07.2024-அன்று வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவலகத்திலும் கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளது. எனவே, இம்முகாமில் கடன் தேவைப்படுவோர் கடன் தொகை பெற ஆவணங்களுடன் நேரில் கலந்து கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News