பூதேரிபுல்லவாக்கம் பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
பூதேரிபுல்லவாக்கம் அரசு உயர் நிலைப் பள்ளியில் தொழு நோய் விழிப்புணர்வு ஊர்வலத்தில மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-01 15:37 GMT
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள்
செய்யாறு அருகே நாட்டேரி அரசு ஆரம்ப சுகா தார நிலையம் சார்பில் பூதேரிபுல்லவாக்கம் கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப் பள்ளியில் தொழு நோய் விழிப்புணர்வு ஊர்வலம் வட்டார மருத்துவ அலுவலர் வினோத்குமார் தலைமையில் நடந்தது.
தலைமை ஆசிரியர் (பொறுப்பு ) மோகனாம்பாள், ஊராட்சி மன்ற உறுப்பினர் புண்ணியகோட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவம் சாரா மேற் பார்வையாளர் வேல்அரசு வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் புஷ்பாராஜா கொடி அசைத்து விழிப்புணர்வு ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
ஊர்வலத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் வார்டு உறுப்பினர் சரவணன், சுகாதார ஆய் வாளர் சம்பத், ஊராட்சி மன்ற செயலாளர் சிவா னந்தம் ஆகியோர் கலந்து கொண்டனர்.