தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

அண்ணல் காந்தியடிகள் நினைவு நாளை தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரித்து "ஸ்பர்ஷ் (SPARSH) தொழுநோய் விழிப்புணர்வு முகாம் ஜனவரி 30 முதல் பிப்ரவரி வரை நடப்பதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.

Update: 2024-02-01 07:05 GMT

 ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ்

 அண்ணல் காந்தியடிகள் நினைவு நாளை முன்னிட்டு ஜனவரி 30 ஆம் நாள் வருடந்தோறும் தொழுநோய் ஒழிப்பு தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் 2017 ஆம் ஆண்டிலிருந்து ஜனவரி 30 முதல் பிப்ரவரி வரை இரு வார நிகழ்வாக அனுசரிக்கப்பட்டு வருகிறது இந்த ஆண்டும் தமிழ் நாட்டில் மாநிலம் முழுவதும் "எஸ்பர்ஷ் (SPARSH) தொழுநோய் விழிப்புணர்வு முகாம் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 13 ஆம் நாள் வரை அனுசரிக்கப்பட்ட உள்ளது. ஜனவரி 30 ஆம் நாள் நமது மாவட்டம் முழுவதும் அனைத்து கல்வி நிலையங்கள், மாவட்ட வட்ட மருத்துவமனைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் தொழுநோய் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்பட உள்ளது.

அன்றைய தினம் தொழுநோய் ஒழிப்பு உறுதி மொழி ஏற்றல் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்துதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து ஜனவரி 31 முதல் பிப்ரவரி 13 வரை ஒவ்வொரு நாளும் விழிப்புணர்வு, கூட்டங்கள் தொழுநோய் கண்டு பீடிப்பு முகாம்கள் தோல் நோய் சிகிச்சை முகாம்கள் செயல்படுத்தப்பட உள்ளன வாரச்சந்தை கூடும் இடங்கள் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட உள்ளது.

தொழுநோயின் ஆரம்ப அறிகுறி தோலில் காணப்படும் சிவந்த அல்லது வெளிர்ந்த உணர்ச்சியற்ற தேமல் தொழுநோயானது மைக்கோ பாக்டீரியம் லெப்ரே (MYCO BACTERIUM LEPRAE) என்னும் கிருமியால் காற்றின் மூலமே பரவுகிறது தொழுநோயானது கூட்டு மருந்து சிகிச்சை (MULTI DRUG TREATMENT) மூலம் முற்றிலும் குணமாகக்கூடியது தொழுநோய்க்கான கூட்டு மருந்து சிகிச்சை முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது எந்த நிலையிலும் தொழுநோயை குணப்படுத்த முடியும் ஆரம்ப நிலை சிகிச்சை ஊனம் வராமல் தடுக்கும். தற்போது தொழுநோய் பரவும் விகிதம் (PREVALENCE RATE) நமது மாவட்டத்தில் பத்தாயிரம் மக்கள் தொகைக்கு 0.26 ஆக உள்ளது இதனை 2027 ஆம் ஆண்டுக்குள் தொழுநோய் இல்லாத மாவட்டமாக அனைவரும் ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக்கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்தார்.

Tags:    

Similar News