விழுப்புரம்: தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

விழுப்புரத்தில் நடைபெற்ற தொழுநோய் ஒழிப்பு பேரணியில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

Update: 2024-02-03 07:40 GMT

தொழுநோய் ஒழிப்பு பேரணி

மகாத்மா காந்தியின் நினைவு தினத்தை முன்னிட்டு தொழுநோய் ஒழிப்பு தினம் விழுப்புரத்தில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாவட்ட கலெக் டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட இப்பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் லட்சுமணன், தொழுநோய் பிரிவு துணை இயக்குனர் டாக்டர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கல்லூரி மாணவ- மாணவிகள் பலர் கலந்துகொண்டு களங்கம் தவிர்ப்போம், கண்ணியம் காப் போம் என்ற முழக்கத்துடன் பேரணியாக சென்று தொழுநோய் தடுப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். இப்பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள தொழுநோய் பிரிவு அலுவலகத்தில் முடிவடைந்தது.

Tags:    

Similar News