மண்ணச்சநல்லூர் அருகே தேர்தல் புறக்கணிக்க கடிதம்: வட்டாச்சியர் உறுதி

திருச்சி மாவட்டம் திருப்பட்டூர் ஊராட்சியில் சாலை வசதி செய்து கொடுக்காதை கண்டித்து தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர்.;

Update: 2024-04-08 15:48 GMT

பேச்சு வார்த்தை நடத்திய அதிகாரிகள்

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே திருப்பட்டூர் ஊராட்சியில் உள்ள மேலத்தெருவில் சுமார் 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் உள்ள சாலை 40 அடி அகலம் உள்ளதாகவும் தேர் செல்லும் பாதையாகவும் உள்ளது.

இந்த பகுதிக்கு சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை என கூறப்படுகிறது. மழைக்காலங்களில் இந்த வீதியில் மழை நீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளது் மேலும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தவறி விழுந்து விபத்துக்கு உள்ளாகின்றனர். தற்போது கோடை காலம் என்பதால் புழுதி பறக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த சாலையை பயன்படுத்துவதில் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.

Advertisement

இது குறித்து பல்வேறு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.இதனால் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கிராம இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் முடிவு செய்து இது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு கடந்த சில தினங்களுக்கு முன் பதிவுத் தபால் மூலம் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மணச்சநல்லூர் வட்டாட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் காவல் துறை மற்றும் அரசு அதிகாரிகள் திருப்பட்டூருக்கு வந்து ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து மக்களின் கோரிக்கையை நியாயமானது. தேர்தல் முடிந்தவுடன் விரைவில் சிமென்ட் சாலை அமைத்து தருவதாக மண்ணச்சநல்லூர் வட்டாச்சியர் பொதுமக்களிடம் உறுதி அளித்துள்ளார். பாராளுமன்ற தேர்தலுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக பொதுமக்களும் உறுதியளித்தனர்.

Tags:    

Similar News