பொங்கல் போனஸ் கேட்டு முதல்வருக்கு கடிதம்

பெரம்பலூரில் உள்ள மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள், பொங்கல் போனஸ் கேட்டு தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினர்.

Update: 2024-01-09 08:53 GMT

பெரம்பலூரில் மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் பொங்கல் போனஸ் கேட்டு தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள தலைமை தபால்நிலையத்தில், ஜனவரி - 8ம் தேதி மாலை பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரத்திலும் பணிபுரியும் மக்களை தேடி மருத்துவப் பணியாளர்கள் தங்களுக்கு பொங்கல் போனஸ் 5500 ரூபாய் வழங்கிட வேண்டும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாத சம்பளம் 11 ஆயிரம் வழங்க வேண்டும் மாத ஊதியத்தை அவரவர் வங்கி கணக்கில் அரசே நேரடியாக செலுத்த வேண்டும் என கோரிக்கை வைத்து அதனை தபால் மூலமாக முதல்வருக்கு கோரிக்கையை அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மக்களைத் தேடி மருத்துவ ஊழியர்கள் சங்கம் சி ஐ டி யு மாநில துணை செயலாளர் செல்வி, தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் கொளஞ்சி, வட்டார பெருப்பாளர்கள் வேப்பந்தட்டை வனிதா, வேப்பூர் உஷா, பெரம்பலூர் புஷ்பலதா, ஆலத்தூர் மகேஸ்வரி, சிஐ டி வி மாவட்ட செயலாளர் அகஸ்டின் உள்ளிட்ட மக்களை தேடி மருத்துவ ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News