அஞ்சல் துறை சார்பில் அகில இந்திய அளவில் கடிதம் எழுதும் போட்டி
அஞ்சல் துறை சார்பில் நடைபெற உள்ள அகில இந்திய அளவில் கடிதம் எழுதும் போட்டியில் 9 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அஞ்சல்துறை அகில இந்திய அளவில் கடித போட்டி நடத்தப்படுகிறது. 150 ஆண்டுகளை கடந்த அஞ்சல்துறை, எட்டு தலைமுறைகளுக்கும் மேலாக உலகமெங்கிலும் உள்ள மக்களுக்கு சேவை செய்து வருகிறது. அதனால் உலகம் வளர்ச்சி அடைந்து விட்டது. எதிர்கால தலைமுறையினருக்கு அவர்கள் மரபுரிமையாக கிடைக்க இருக்கும் உலகம் எவ்வாறு இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்கள்? என்பது பற்றி கடிதம் எழுத வேண்டும்.
போட்டியாளர்கள் 9 வயது முதல் 15 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆங்கிலம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் எழுதலாம். கடித வடிவில் இருக வேண்டும். போட்டி நடத்தப்படும் இடம் பின்னர் அறிவிக்கப்படும். போட்டிக்கு வருபவர்கள் அதற்கு தேவையான பொருட்களை கொண்டு வர வேண்டும். மாநில அளவில் முதல் பரிசாக ரூ.25 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.5 ஆயிரமும் வழங்கப்படுகிறது. அகில இந்திய அளவில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.25 ஆயிரமும், 3-ம் பரிசாக ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. இந்த தகவலை சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அருணாசலம் தெரிவித்துள்ளார்.