கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

திண்டுக்கல் மாவட்டம்,கோவிந்தநாயக்கா் நகரை சேர்ந்த மூதாட்டி கொலை வழக்கில் கொலையாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்பளித்தது.;

Update: 2024-01-07 06:04 GMT

ஆயுள் தண்டனை

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரையை அடுத்த கோவிந்தநாயக்கா் நகரைச் சேர்ந்தவா் ஜெ. பெரியசாமி (40). கூலித் தொழிலாளியான இவா், கடந்த 2012-ஆம் ஆண்டு இதே பகுதியைச் சேர்ந்த மூதாட்டியை கொலை செய்தாா். இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து பெரியசாமியை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை திண்டுக்கல் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி ஆஜராகி வாதிட்டாா். விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி. சரண் வெள்ளிக்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில் பெரியசாமிக்கு, ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.
Tags:    

Similar News