கள்ளசந்தந்தையில் சாராயம்

நீலகிரியில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

Update: 2024-06-06 01:06 GMT

மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.


நீலகிரி மாவட்டத்தில் 73 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இங்கு மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை கடைகள் செயல்படுகிறது. டாஸ்மாக் ஊழியர்கள் உதவியுடன் டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுவை வாங்கி வைத்து, டாஸ்மாக் கடைகள் மூடி இருக்கும் நேரத்திலும் கடைக்கு விடுமுறை விடப்படும் தினங்களிலும் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நீலகிரியில் இந்த பிரச்சனை அதிக அளவில் உள்ளதால் போலீஸார் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஊட்டி அருகே கப்பத்தொரை பகுதியில் ஒரு வீட்டில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் அதிக அளவுக்கு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனடிப்படையில் ஊட்டி ஊரக துணை காவல் ஆய்வாளர் சிவகுமார் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தது தெரியவந்தது. மது விற்பனை செய்த வீட்டிற்குள் போலீஸார் அதிரடியாக புகுந்து அங்கிருந்து 91 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். கூடுதல் விலைக்கு மது விற்ற பெண்ணை விசாரணை நடத்தினர். இதில் அவர் அதே பகுதியை சேர்ந்த சரசு (57), மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. ஏற்கனவே இவர் இதே போல் பலமுறை கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து கைதாகி இருப்பதும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீஸார் அந்த பெண்ணை கைது செய்து, மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News