வெள்ளகோவில் நகராட்சி அருகே மது விற்றவர் கைது

வெள்ளக்கோவில் நகராட்சி அருகே தடை செய்யப்பட்ட நேரத்தில் மது விற்பனையில் ஈடுபட்ட வரை வெள்ளகோவில் காவல் உதவி ஆய்வாளர் கைது செய்து அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தார்.

Update: 2024-04-01 05:31 GMT

காவல்துறை விசாரணை


திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் காவல் உதவி ஆய்வாளர் முத்துக்குமார் நேற்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது காங்கேயம் ரோடு நகராட்சி அலுவலகம் எதிரில் மது விற்றுக் கொண்டிருந்த புதுக்கோட்டை மேலக்கோட்டையை  சேர்ந்த தமிழரசன் (வயது 44) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆறு மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News