சாராயம் கடத்தியவர் கைது - 110 லிட்டர் பறிமுதல்

திருமருகல் அருகே பாண்டிசேரியில் இருந்து சாராயம் கடத்தி வந்தவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-27 04:23 GMT

பைல் படம் 

 புதுச்சேரி மாநிலத்திலிருந்து நாகை வழியாக தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு சாராயம் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதன்பேரிலும் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் உத்தரவின்பேரிலும் நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.அதேபோல் வாழ்மங்கலம் சோதனை சாவடியில் திட்டச்சேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அக்பர்அலி மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது.அந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் மறித்து போலீசார் சோதனை நடத்தினர்.சோதனையில் மோட்டார் சைக்கிளில் இருந்த மூட்டையில் 110 லிட்டர் இருந்தது. இதை தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்தவரிடம் விசாரணை நடத்தினர்.இதில் அவர் காரைக்கால் மாவட்டம் டி.ஆர்.பட்டினம் போலகம் புதுக்காலனி பகுதியை சேர்ந்த முகிலன் மகன் ராஜேஸ் (வயது 24) என்பதும் இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயத்தை திருமருகல் பகுதிக்கு கடத்தி சென்றதும் தெரிய வந்தது.இதுகுறித்து திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.மேலும் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News