கால்நடை குடற்புழு நீக்க, ஒட்டுண்ணி நீக்க செயல்விளக்க பயிற்சி

துரிஞ்சாபுரம்,சடையனோடையில் விவசாயிகளுக்குக் கால்நடை விலங்குகளின் குடற்புழு நீக்கம் மற்றும் ஒட்டுண்ணி நீக்கம் செயல்விளக்க பயிற்சி கூட்டம் நடந்தது.

Update: 2023-10-31 03:40 GMT

பயிற்சி முகாம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உட்பட்ட சடையனோடை கிராமத்தில் விவசாயிகளுக்கு கால்நடை விலங்குகளின் குடற்புழு நீக்கம் மற்றும் ஒட்டுண்ணி நீக்கம் செயல்விளக்கு பயிற்சி கூட்டம் வேளாண்மை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், தலைமையில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சடையனோடை கிராமத்தில் மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை சீரமைப்பு திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கால்நடை விலங்குகளின் குடற்புழு நீக்கம் மற்றும் ஒட்டுண்ணீ நீக்கம் செயல்விளக்க பயிற்சி நேற்று வேளாண்மை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன், தலைமையில் நடைபெற்றது அதில் கால்நடைகளில் குடற்புழு நீக்கம் ஒட்டுண்ணீ நீக்கம் குறித்தும் மற்றும் அதன் நன்மைகள் பற்றியும் விவசாயிகளுக்கு தெளிவாக கூறினார். குடற்புழு மூலம் ஏற்படும் தீமைகள் குறித்தும் அதை அப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக்கூறி அதை செயல்முறையாகவும் கூறினார். மேலும் உழவர் பயிற்சி நிலையம் மூலம் விவசாயிகளுக்கு பயிற்சியும் அதன் விளக்கங்களும் கூறினார் மேலும் அவர்கள் கால்நடைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அதனை பாரமரிப்பது குறித்தும் விவசாயத்தின் மூலம் என்னென்ன பயிர்கள்கொள்முதல் செய்யலாம் மேலும் விவசாயத்தின் மூலம் ஏற்படும் நன்மைகள்குறித்தும் அதன் தன்மைகள் குறித்தும் வேளாண்மை உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன், விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் கால்நடை பராமரிப்புத்துறை சோமசுந்தரம் வேளாண்மை துணை இயக்குநர் இராமநாதன், உழவர் பயிற்சி நிலையம் திருவண்ணாமலை மற்றும் வேளாண்மை அலுவலர் சௌந்தர், கால்நடை மருத்துவர் முருகவேல், தொழில்நுட்ப மேலாளர் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பாஸ், வேளாண்மை அலுவலர்கள் வெற்றிசெல்வன், ஆனந்தி, மற்றும் விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News