லோடுமேன் குடிபோதையில் தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி இ.பி.ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த லோடுமேன் குடிபோதையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.;

Update: 2024-02-05 14:40 GMT

பைல் படம்

திருச்சி இ.பி.ரோடு சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் நடேசன். இவரது மகன் மணி (வயது 37). இவர் கம்மாள தெருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் லோடுமேனாக பணிபுரிந்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். நேற்று குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார் .வீட்டில் இவரது மனைவி மற்றும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது இவர் சேலையால் வீட்டில் ஆஸ்பெஸ்டாஸ் கம்பியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அவரது மனைவி நிஷாந்தி கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை போலீசார் விரைந்து வந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் எதற்காக இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News