25 மாணவர்களுக்கு கல்வி கடன் வழங்கல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற கல்வி கடன் வழங்கும் நிகழ்ச்சியில் 14 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-16 04:23 GMT

கல்வி கடன் வழங்கும் விழா 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.1.97 கோடி மதிப்பிலான கல்விக்கடனுதவிகளை கலெக்டர் ஷ்ரவன்குமார் வழங்கினார்.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி இணைந்து கல்விக் கடன் முகாம் நடத்தினர். முகாமில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பேசியதாவது,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கடந்த 3 ஆண்டுகளில் மாணவர்களுக்கு அதிகளவில் கல்விக் கடன் வழங்கப்பட்டு வருகிறது. 2021-22ம் கல்வி ஆண்டில் 618 மாணவர்களுக்கு ரூ.6.28 கோடி, 2022-23ம் கல்வி ஆண்டில் 723 மாணவர்களுக்கு ரூ.7.17 கோடி, தற்போது 25 மாணவர்களுக்கு ரூ.1.97 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டடுள்ளது.

இதன் மூலம் 2023-24ம் கல்வி ஆண்டில் 906 மாணவர்களுக்கு ரூ.14.12 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. முகாமில் கலந்துகொள்ள இயலாத மாணவர்கள், புதியதாக கல்வி கடன் கோரும் மாணவர்கள் https://www.vidyalakshmi.co.in.students என்ற இணையத்தில் விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்தும் பயன்பெறலாம்.

கல்வி கடனுக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் நலன் கருதி ஆவணங்களை சரிபார்த்து வங்கியாளர்கள் விரைந்து கடன் வழங்க வேண்டும். மாணவர்கள் கல்வியை நன்கு கற்று சிறந்த வேலை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்' என்றார்.

Tags:    

Similar News