நாளை கள்ளக்குறிச்சியில் லோன் மேளா

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நாளை லோன் மேளா நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-02-22 03:57 GMT

மாவட்ட ஆட்சியர் 

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நாளை (23ம் தேதி) லோன் மேளா நடக்கிறது. இது குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்படுள்ளதாவது,

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஊரக பகுதிகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக 2023-24ம் ஆண்டில் ரூ.869.19 கோடி கடன் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதனையொட்டி மாவட்ட தொழில் மையம் சார்பில் கடந்த 2023ம் ஆண்டு ஜூலை மாதம் நடந்த லோன் மேளாவில் 2,568 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.113.22 கோடி கடன் வழங்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த 2023ம் ஆண்டு டிச.,31ம் தேதி வரையிலான நிதியாண்டில் ரூ.508.74 கோடி அளவில் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நாளை(23 ம் தேதி) மாலை 3 மணியளவில் லோன் மேளா கூட்டம் நடக்கிறது. இதில் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது கட்டுமின்றி, கடன் வகைகள், கடன் மற்றும் மானியத் திட்டங்கள், அவற்றை பெறும் முறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு கள்ளக்குறிச்சி ராஜா நகரில் உள்ள மாவட்ட தொழில் மைய பொது மேலாளரை நேரடியாகவோ அல்லது 04151-294057 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தொழில் முனைவோர் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News