மக்களவை தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
புதுநகர் அரசுஆரம்ப சுகாதார நிலையத்தில் மக்களவை தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-03-22 07:17 GMT
உறுதிமொழி ஏற்பு
கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம், புதுநகர் ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கந்தர்வகோட்டை (தனி) தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலருமான ஸ்ரீதர் தலைமையில், வட்டாட்சியர் எஸ்.விஜயலட்சுமி, தேர்தல் துணை வட்டாட்சியர் பால்பாண்டி ஆகியோர் முன்னிலையில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு, பொது மக்களுக்கும் மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விளக்கமளித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் புதுநகர் வட்டாரத் தலைமை மருத்துவர் மணிமாறன், தேர்தல் உதவியாளர் செந்தில்குமார், புதுநகர் வருவாய் ஆய்வாளர் கண்ணன், புதுநகர்சரகத்துக்கு உள்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை வட்டாரக் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் செய்திருந்தார்.