நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம்
நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்களவை தேர்தல் பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.;
Update: 2024-03-18 02:27 GMT
ஆட்சியர் ஆய்வு
நாடாளுமன்ற பொது தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது அதனடிப்படையில் அரசு அலுவலகங்களில் அரசியல் சார்ந்த படங்கள், காலண்டர்கள், நலத்திட்ட ஸ்டிக்கர்கள் பிரதம மந்திரி முதலமைச்சர் அமைச்சர்களின் படங்கள் அகற்றப்பட்டு வருகிறது. நன்னிலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை குழு மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர்களுடன் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் சாரூஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.