ஈச்சர் லாரி மின் கம்பத்தில் உரசி தீ விபத்து !
தேங்காய் மட்டை ஏற்றி சென்ற ஈச்சர் லாரி மின் கம்பத்தில் உரசி தீப்பிடித்து எரிந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-06 12:23 GMT
தீ விபத்து
தேங்காய் மட்டை ஏற்றி சென்ற ஈச்சர் லாரி மின் கம்பத்தில் உரசி தீப்பிடித்து எரிந்தது கிருஷ்ணகிரி மாவட்டம் பருகூரில், தேங்காய் மட்டை ஏற்றி சென்ற ஈச்சர் லாரி மின் கம்பி உரசியதில் தீ பற்றியது. பருகூர் அருகே BRG மாதேபள்ளியில் எருது விடும் திருவிழா நடைபெறுவதால் BDO அலுவலகம் எதிரே உள்ள குறுக்கு சாலையில் சென்றபோது எதிர்பாராத விதமாக மின் கம்பியில் உரசி தீ பிடித்தது மலமலவென பரவி எரியும் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.