வைக்கோல் பார லாரியில் தீ விபத்து
ஆவடி பட்டாபிராம் பகுதியில் லாரியில் வைக்கோல் ஏற்றும் போது மின் கம்பி உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது.;
Update: 2024-05-29 07:24 GMT
தீயை அணைக்கும் பணியில் வீரர்கள்
ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் லாரியில் வைக்கோல் ஏற்றும் பொழுது மின் கம்பி உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது தீ விபத்து ஏற்பட்ட சற்று நேரத்தில் தீ வாகனம் முழுவதும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. தகவலறிந்து ஆவடி தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் மும்பரமாக ஈடுபட்டனர்.