சேலம் சூரமங்கலத்தில் லாட்டரி சீட்டு வியாபாரி கைது
சூரமங்கலம் பகுதியில் கேரளா லாட்டரியின் நம்பரை வெள்ளை பேப்பரில் எழுதி விற்பனை செய்த நபரை போலீசார் மத்திய சிறையில் அடைத்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-23 12:29 GMT
லாட்டரி சீட்டு வியாபாரி கைது
தமிழ்நாட்டில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனையும் மீறி ஆங்காங்கே விற்பனை நடந்து வருவதாக சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரிக்கு புகார் வந்தது. இதையடுத்து லாட்டரி விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார். இந்நிலையில், சூரமங்கலம் பகுதியில் கேரளா லாட்டரியின் நம்பரை வெள்ளை பேப்பரில் எழுதி விற்பனை செய்ததாக அம்மாபேட்டை வையாபுரி உடையார் தெருவை சேர்ந்த அமர்நாத் (39) என்பவரை சூரமங்கலம் போலீசார் கைது செய்தனர். பிரபல லாட்டரி வியாபாரியான இவரை போலீசார் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.