காதல் தோல்வி - இளைஞர் தூக்கிட்டு தற்கொலை !
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூரில் காதல் தோல்வியால் மனமுடைந்த இளைஞர் விவசாய நிலத்தில் உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.போலீசார் விசாரணை.;
By : King 24x7 Angel
Update: 2024-06-01 04:48 GMT
தூக்கிட்டு தற்கொலை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தச்சங்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் 21 வயதான மார்ட்டின் சுஜி. இவர் சென்ட்ரிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு காதலில் தோல்வி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.இதனால் கடந்த சில மாதங்களாக மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று குமூளூரில் தனியார் விவசாய நிலத்தில் உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல்றிந்த காணக் கிளியநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து கணக்கிளியநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.