வங்கியில் குறை மின்னழுத்தம் -அலுவலர்கள்,வாடிக்கையாளர்கள் பாதிப்பு

விராலிமலை அருகே நீர்பழனி இந்தியன் வங்கி கிளையில் நிலவும் குறை மின்னழுத்த பிரச்சனையால் பொதுமக்கள், வங்கி அலுவலர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

Update: 2024-05-07 03:13 GMT

பைல் படம் 

விராலிமலை ஒன்றியம் நீர்பழனியில் இந்தியன் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. இங்கு நீர்பழனி, களமாவூர், நடுப்பட்டி, லட்சுமணன்பட்டி, பாலாண்டம்பட்டி,விளாப்பட்டி,ஆலங்குடி,வெம் மணி,நாங்குப்பட்டி,மருதம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் கணக்கு தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த ஓராண்டாகவே, வங்கியில் குறைந்த மின் அழுத்தம் பிரச்னை காரணமாக மின் வினியோகம் சீராக இல்லை. இதனால் கம்ப்யூட்டர்கள், யூபிஎஸ், ஏடிஎம் இயந்திரம் இயங்காததுடன், மின்சாதன பொருட்கள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன: இதன் காரணமாக பணிகள் பாதிக்கப்படுவதால் அலுவலர்கள், வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

தொண்டைமான் நல்லுார் துணை மின் நிலையத்தில் இருந்து நீர்பழனிக்கு மின்வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. வங்கி வாடிக்கையாளர்கள் நலன் கருதி சீரான மின்வினியோகம் கிடைக்க வங்கியின் அருகில் தனியாக ஒரு மின்மாற்றி அமைக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News