வல்லத்தில் குறைந்த மின்னழுத்தம்: மின்சாதன பொருள்கள் பழுது

மின்வாரிய உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, மின்னழுத்த குறைபாட்டை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2024-05-03 12:46 GMT

மின்வாரிய உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, மின்னழுத்த குறைபாட்டை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், வல்லம் ஊராட்சியில், 1,000த்துக்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இங்கு, சந்தி அம்மன் கோவில் எதிரில் உள்ள மின் மாற்றியில் இருந்து, 150க்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், கடந்த ஆண்டு, இந்த மின்மாற்றியில் பழுது ஏற்பட்டது. இதையடுத்து, வல்லக்கோட்டை மின்வாரிய ஊழியர்கள், அதே பகுதியில் உள்ள மற்றொரு மின்மாற்றியில், மாற்றி இணைப்பை கொடுத்து மின்சாரம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒராண்டாக, பழுதான மின்மாற்றியை சரி செய்யாததால், ஏற்படும் குறைந்த மின்னழுத்தத்தால், அப்பகுதியினர் அவதி அடைந்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேரங்களில், அதிக மின் தேவை ஏற்படுவதால், குறைந்த மின்னழுத்தம் அதிகரித்து, டி.வி., மின்விசிறி, ப்ரிஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுதடைகிறது. மேலும், குழந்தைகள், வயதானோர் என, அனைவரும் காற்று வசதி இல்லாததால், ஒராண்டாக இரவு நேங்களில் சரியான துாக்கமின்றி தவித்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதியினர் கூறியதாவது: ஒரு மின்மாற்றியில் இருந்து அளிக்கப்படும் மின் இணைப்பை காட்டிலும், இரு மடங்கு இணைப்பு உள்ளதால், மின்னழுத்தம் அதிகரித்து வருகிறது. ஆன்லைனின் புகார் அளித்தால், லோக்கல் மின்வாரிய அலுவலகத்தில் இருந்து, தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு, விபரங்களை கேட்ட பின், விரைவில் சரி செய்து தருகிறோம் என்று, உறுதி அளிப்பதோடு சரி, எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. எனவே, மின்வாரிய உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, மின்னழுத்த குறைபாட்டை விரைந்து தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News