"காஞ்சிபுரம் கோவில்களில் மதுரை ஆதீனம் வழிபாடு"
மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு வந்தார்.;
Update: 2024-02-28 07:05 GMT
மதுரை ஆதீனம் காஞ்சிபுரம் கோவில்களில் வழிபாடு
மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், காஞ்சிபுரம் சங்கர மடத்திற்கு நேற்று வந்தார். சங்கர மடத்தின் மேலாளரும், காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யமுமான ந.சுந்தரேச அய்யர் தலைமையிலான குழுவினர், மதுரை ஆதீனத்தை வரவேற்றனர். சங்கர மடத்தில் உள்ள மஹா பெரியவர் சுவாமிகள் மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானங்களில் தரிசனம் செய்தார். அவருக்கு சங்கர மடத்தின் சார்பில் மாலை அணிவித்து பிரசாதமும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின்போது காஞ்சிபுரம் சங்கரா கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன், தமிழ்த் துறை தலைவர் ராதாகிருஷ்ணன், பேராசிரியர் தெய்வசிகாமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர். காஞ்சிபுரம் சங்கர மடத்தை தொடர்ந்து, காமாட்சி அம்மன் கோவில், ஏகாம்பரநாதர் கோவில்களில் மதுரை ஆதீனம், சுவாமி தரிசனம் செய்தார்.