கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு - செல்லூர் ராஜு அன்னதானம்
கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வையொட்டி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் மகன் ஆர் ஜே தமிழ்மணி நினைவு அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.;
Update: 2024-04-24 05:31 GMT
அன்னதானம்
மதுரையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் மகன் மறைந்த ஆர் ஜே தமிழ்மணி நினைவு அறக்கட்டளை சார்பில் மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் செல்லூர் ராஜு அவரது மனைவி மற்றும் அவரது மகன் குடும்பத்தினர் உடன் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.