ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 தேர்வில் மதுரை மாணவர் 597வது இடம்

ஜேஇஇ அட்வான்ஸ்டு 2024 தேர்வில் மதுரை மாணவன் கார்த்திக் அகர்வால் அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 597வது இடம் பெற்று தேர்ச்சி பெற்றார்.

Update: 2024-06-11 04:51 GMT

தேர்வு தயாரிப்பு சேவைகளில் முன்னனியில் இருக்கும் ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட்-ன் (AESL), மதுரை மையத்தைச் சேர்ந்த மாணவன் கார்த்திக் அகர்வால் மதிப்புமிக்க JEE அட்வான்ஸ்டு 2024 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று அகில இந்திய தரவரிசைப் பட்டியலில் 597வது இடம் பெற்று தேர்ச்சி அடைந்துள்ளதை பெருமையுடன் அறிவிக்கிறது.

இந்த குறிப்பிடத்தக்க சாதனை மாணவனின் கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மற்றும் AESL வழங்கிய உயர்தர பயிற்சிக்கு ஒரு சான்றாகும். தேர்வு முடிவுகளை ஐஐடி மெட்ராஸ் வெளியிட்டுள்ளது. உலகளவில் கடினமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்றாக கருதப்படும் JEE அட்வான்ஸ்டுக்குத் தயாராவதற்காக மாணவர் AESL இன் வகுப்பறைத் திட்டத்தில் சேர்ந்தார். பாடக் கருத்துக்கள் பற்றிய அவரது கடுமையான புரிதல் மற்றும் படிப்பு அட்டவணையை கண்டிப்பாக கடைபிடித்ததே அவரது குறிப்பிடத்தக்க வெற்றிக்கு காரணம் என்றார்.

"உள்ளடக்கம் மற்றும் பயிற்சி என ஆகாஷ் எனக்கு இரண்டிலும் உதவியதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஏஇஎஸ்எல்-ன் இந்த உதவி இல்லாமல் நான் குறுகிய காலத்தில் வெவ்வேறு பாடங்களில் பல கருத்துகளைப் புரிந்துகொண்டிருக்க மாட்டேன்," என்று மாணவர் கூறினார்.

மாணவனின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்த ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் லிமிடெட் (AESL) இன் முதன்மை கல்வி மற்றும் வணிகத் தலைவர் தீரஜ் மிஸ்ரா, "மாணவனின் முன்மாதிரியான சாதனைக்காக நாங்கள் வாழ்த்துகிறோம். மாணவனின் சாதனை அவரது கடின உழைப்பையும் அர்ப்பணிப்பு மற்றும் பெற்றோரின் ஆதரவு ஆகியவற்றைப் பறைசாற்றுகிறது. மாணவனின் எதிர்கால முயற்சிகளில் சிறப்பாக அமைய நாங்கள் வாழ்த்துகிறோம்" என்றார்.

JEE அட்வான்ஸ்டு ஆண்டுதோறும் ஐஐடிகளில் ஒன்றால் நடத்தப்படுகிறது. JEE முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக இது நடத்தப்படுகிறது. JEE Main என்பது பல தேசிய தொழில்நுட்பக் கழகம் (NITகள்) மற்றும் இந்தியாவில் உள்ள பிற மைய உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கானது என்றாலும், இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IT) சேர்வதற்கான ஒரு முக்கிய தேர்வாக JEE அட்வான்ஸ்டு கருதப்படுகிறது. மாணவர்கள் ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வில் இடம்பெற ஜேஇஇ மெயின் தேர்வு கட்டாயம் எழுத வேண்டும்.JEE (அட்வான்ஸ்டு) 2024 இல் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு தாள்களிலும் மொத்தம் 180,200 மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர் மொத்தம் 48.248 மாணவர்கள் (அட்வான்ஸ்டு) 2024 இல் தகுதி பெற்றுள்ளனர்.

ஆகாஷ் பைஜூஸ் உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்காக வடிவமைக்கப்பட்ட பல்வேறு பாட வடிவங்கள் மூலம் விரிவான IIT-JEE பயிற்சியை வழங்குகிறது. சமீபத்தில், ஆகாஷ் கணினி அடிப்படையிலான பயிற்சியை வளர்ப்பதில் தனது கவனத்தை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் புதுமையான ITtor இயங்கு தளமானது பதிவுசெய்யப்பட்ட வீடியோ விரிவுரைகளை வழங்குகிறது இது மாணவர்கள் சுய-வேக கற்றலில் ஈடுபடவும், தவறவிட்ட அமர்வுகளைக் பார்க்கவும் உதவுகிறது. மேலும், மாதிரி தேர்வுகள் உண்மையான தேர்வு நிலைமைகளை உருவகப்படுத்துகின்றன. இது மாணவர்கள் தேர்வை திறம்பட சமாளிக்க தேவையான பரிட்சயம் மற்றும் தன்னம்பிக்கையை அளிக்கின்றன.

Tags:    

Similar News