நடிகர் விஜய்யை முதல்வராக்க வேண்டும் - தீவிரமாக வேலை செய்யும் தவெக நிர்வாகிகள்
2026ல் விஜய் முதல்வராக வேண்டும் என பேசிய மாவட்ட நிர்வாகியால் பரபரப்பு
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வெற்றி பெற்று தலைவர் விஜயை முதல்வராக்க வேண்டும் என்ற போஸ்டர் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய் தொடங்ங்கிய புதிய கட்சியான தமிழக வெற்றி கழகத்தின் மதுரை மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.தங்கப்பாண்டி பேசும்போது, “ நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளார். கட்சி ஆரம்பித்தவுடன் வெளிப்படையான ஜாதி மத பேதமற்ற தொலை நோக்கு சிந்தனையுடைய லஞ்ச ஊழலற்ற சிறந்த நிர்வாகம் படைப்பேன் என வஜய் தெரிவித்ததால், இக்கட்சி தமிழக மக்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தனியார் மகாலில் தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வெற்றி கழக மாவட்ட தலைவர் எஸ்.ஆர்.தங்கபாண்டி உசிலம்பட்டி சட்டமன்றதொகுதி உறுப்பினர் எஸ் ஓ பி விஜய் மகாலிங்கம் கலந்து கொண்டார்.
வரும் 2026 சட்டமன்றத் தொகுதி தேர்தலில் வெற்றி பெற்று விஜயை முதல்வராக்க வேண்டும். நற்பணி மன்றம் ஆக இந்த கொடியை விரைவில் கட்சி கொடியாக ஏற்ற வேண்டும் அதற்காக ரசிகர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்” என பேசினார்.