புனரமைக்கப்பட்ட ஸ்ரீ கன்னி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா
புனரமைக்கப்பட்ட ஸ்ரீ கன்னி விநாயகர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு.
Update: 2024-02-23 09:19 GMT
கரூர் மாவட்டம், மணவாடி கிராமம், கத்தாழைப்பட்டி அருகே உள்ள செல்லிபாளையத்தில் அமர்ந்து அருள் பாலித்து வரும், அருள்மிகு ஸ்ரீ கன்னி விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ கருப்பண்ண சாமி ஆலயம் புதுப்பிக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு யாக வேள்வியில் புனித நீர் வைத்து பூஜிக்கப்பட்டு, வேத மந்திரங்களை சிவாச்சாரியார்கள் உச்சாடனம் செய்தனர். இதன் பின்பு புனித நீரை கோவில் கோபுரத்திற்கு எடுத்துச் சென்று , கலசத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேக விழாவை விமர்சையாக நடத்தினர். பின்னர் புனித நீர் அனைத்து பக்தர்கள் மீதும் படும்படி தெளிக்கப்பட்டது. மூலவருக்கு மகா தீபாரணையும் நடைபெற்றுது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ஏராளமானோர் சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் விழா கமிட்டி சார்பாக அன்னதானமும் வழங்கப்பட்டது.