ஸ்ரீ சேத்து மேல் செல்லையனார் செட்டிக்கருப்பர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா !
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஸ்ரீ சேத்து மேல் செல்லையனார் செட்டிக்கருப்பர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-07-10 10:03 GMT
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஸ்ரீ சேத்து மேல் செல்லையனார் செட்டிக்கருப்பர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாக விளங்கும் அரிமளம் அருகே உள்ள ஸ்ரீ சேத்து மேல் செல்லையனார் செட்டிக்கருப்பர் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக முதலாம் கால பூஜையாக கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, உள்ளிட்ட பல்வேறு யாகங்கள் வளர்க்கப்பட்டன பின்னர் இரண்டாம் கால யாகசாலை மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து இன்று காலை நான்காம் கால யாகசாலை நடைபெற்றது அப்பொழுது கோபூஜை மற்றும் கணபதி ஹோமம் செய்யப்பட்டு வேத பண்டிதர்கள் வேதங்கள் முழங்க பூர்ணாதி நடைபெற்றது இதனை தொடர்ந்து காசி ராமேஸ்வரம் உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க ஆலயத்தை மூன்று முறை வலம் வந்தனர் பின்னர் விமானத்திற்கு கொண்டுவரப்பட்ட புனித நீரானது கருடன் ஆசிர்வாதத்துடன் வேதங்கள் முழங்க புனித நீர் அடங்கிய குடங்களை எடுத்து சிவாச்சாரியார்கள் கும்பகலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் செய்தனர் அப்பொழுது பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்தனர் இதனை அடுத்து மூலவர் ஸ்ரீ சேத்து மேல் செல்லையனார் செட்டிக்கருப்பர் புனித நீர் ஊற்றப்பட்டு மகாதீபாரதனை காட்டப்பட்டது இந்நிகழ்ச்சியில் அரிமளம் மட்டுமல்லாது சுற்றுப்புறத்தில் உள்ள 18 கிராமங்களை சேர்ந்த 1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் பின்னர் அங்கு வந்திருந்த பக்தர்களுக்கு விழா கமிட்டி சார்பில் அன்னதானங்கள் வழங்கப்பட்டன காவல்துறையினர் சிறப்பான பாதுகாப்பு பணி ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.