பாலமுனீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம்

நாகை மாவட்டம் திருக்குவளையை அடுத்த மேலவாழக்கரை  பாலமுனீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

Update: 2024-06-24 12:51 GMT

கும்பாபிஷேகம்

 திருக்குவளையை அடுத்த மேலவாழக்கரை கிராமத்தில் பழமை வாய்ந்த  பாலமுனீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மகா  கும்பாபிஷேக விழா  கணபதி ஹோமத்துடன் நேற்று முன்தினம் தொடங்கியது. தொடர்ந்து லெட்சுமி ஹோமம் யாகசாலை பூஜைகள் நடைப்பெற்று பூர்ணாஹூதி நடைப்பெற்றது. தொடர்ந்து இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுப்பெற்று கடம் புறப்பாடு நடைப்பெற்றது.  தொடர்ந்து பால முனீஸ்வரர்க்கு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைப்பெற்றது. இதில் ஏரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News