மகாவீரர் ஜெயந்தி - இறைச்சி கடைகள் மூடல்
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகள் மூடப்பட்டன.
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் இன்று (ஏப்.21ம் தேதி) இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில், "தமிழக அரசு உத்தரவின்படி 21.04.2024 ஞாயிற்றுக்கிழமை மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று அதிகாலை 12.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் எங்கும் ஆடு, மாடு, கோழி முதலான எந்த வித உயிரினங்களையும் இறைச்சிக்காக அல்லது வேறு எந்த காரணங்களுக்காக வதை செய்யவோ அல்லது மாமிசங்களை விற்பனை செய்யவோ கூடாது. மீறி விற்பனை செய்யப்படும் மாமிசங்களை பறிமுதல் செய்யப்படுவதோடு விற்பனை செய்பவர்கள் உரிமம் ரத்து செய்யப்படும். அதோடு அபராதம் விதித்தல் மற்றும் பொது சுகாதார சட்டப்படி நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து இன்று தூத்துக்குடி மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் மூடப்பட்டுள்ளது.