பராமரிப்புப் பணிகள் : திருச்சி - ராமேசுவரம் ரயில் பகுதி ரத்து
திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள தகவல்
Update: 2024-07-01 04:16 GMT
மானாமதுரை - ராமநாதபுரம் பிரிவில் பராமரிப்புப் பணிகள் காரணமாக, திருச்சி - ராமேசுவரம் - திருச்சி விரைவு ரயில்களானது (16849, 16850) ஜூலை 1 முதல் 31 ஆம் தேதி வரை (வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளைத் தவிர) மானாமதுரை - ராமநாதபுரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரயில்களானது பாம்பன் பால பராமரிப்புப் பணி காரணமாக ஏற்கெனவே ராமநாதபுரம் - ராமேசுவரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.