தமிழை இந்திய ஆட்சிமொழி ஆக்குங்கள் - கமல்ஹாசன்

தமிழ் மொழி மீது பிரதமருக்கு காதல் இருந்தால் தமிழை இந்திய ஆட்சிமொழி ஆக்குங்கள் என கமல்ஹாசன் பிரச்சாரத்தில் பேசினார்.

Update: 2024-03-30 00:54 GMT

தமிழ் மொழி மீது பிரதமருக்கு காதல் இருந்தால் தமிழை இந்திய ஆட்சிமொழி ஆக்குங்கள் என கமலஹாசன் பிரச்சாரத்தில் பேசினார்.


மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் ஈரோடு வீரப்பன்சத்திரம் , கருங்கல்பாளையம ஆகிய இடங்களில் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாஷை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு பரப்புரையில் ஈடுபட்டார். பிரச்சாரத்தில் பேசிய கமலஹாசன், ஈரோட்டில் என் பிரச்சாரத்தை துவங்க இரண்டு காரணங்கள் ஒன்று பெரியார் , அவர் பெயர் சொன்னாலே தமிழ்நாட்டின் 80% சரித்திரத்தை பேசி விட்டதாக அர்த்தம் என்றார்.

திமுக வழங்கும் பெண்களுக்கு ஊதியம் திட்டத்தை சொன்னது மக்கள் நீதி மய்யம்.ஆனால் செயல்படுத்தியது எனது சகோதர்ர் ஸ்டாலின் என்றும் ஏன் காலை உணவு திட்டம் , மகளிர் உரிமைத்தொகை திட்டங்களை ஏன் வட மாநிலங்களில் செயல்படுத்தவில்லை என்று கேள்வி எழுப்பிய கமலஹாசன் , நாம் மீது கை வைப்பவர்களுக்கு எதிராக ஒரு விரல் போதும் என்றார்.

நியாகத்திற்காக மக்கள் நீதி மய்யம் குரல் கொடுப்போம் என்றும் அதை யார் செய்தாலும் பாராட்டுவேன் என்றார். மத்தியில் கூட்டாச்சி மாநிலத்தில் சுயாட்சி அது வரணும் என்றால் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றும் தமிழ் மொழி மீது பிரதமருக்கு காதல் இருந்தால் தமிழை இந்திய ஆட்சிமொழி ஆக்குங்கள் என்ற கமலஹாசன் , அரசியலில் மதம் கலந்த நாடு உருப்பட்டதாக சரித்திரம் கிடையாது என்றும் நமது பண்பாட்டை காக்கும் நாடு தமிழ்நாடு என்றார்.

Tags:    

Similar News