கிருஷ்ணராயபுரத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்
கிருஷ்ணராயபுரம் P.S திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்
Update: 2023-12-27 02:01 GMT
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் மேல அக்ரஹாரம் பகுதியில் உள்ள பி எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. தமிழக அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழி வகுக்கும் இந்த திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில், எரிசக்தி துறை,மின்சார வாரியம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, உள்ளிட்ட 10- துறைகளின் சார்பில், மனுக்கள் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முகாமில், அப்பகுதியில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் குறைகள் குறித்து அளித்த மனுக்களை பெற்றுக் கொண்ட அதிகாரிகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்து ஒப்புதல் சீட்டு வழங்கினர். இந்த முகாமில் மனு அளிக்க வந்த பொது மக்களுக்கு தேவையான உதவிகளையும், ஏற்பாட்டினையும் கிருஷ்ணராயபுரம் திமுக பேரூர் கழக செயலாளர் சசிகுமார் செய்து கொடுத்தார்.