காவேரிப்பட்டணத்தில் மக்களுடன் முதல்வர் முகாம்
அதிகாரிகள் கலந்து கொண்டனர்
Update: 2023-12-21 03:05 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் படி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் மக்க ளுடன் முதல்வர் முகாம் காவேரிப்பட்டினம் பேரூராட்சி சார்பில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பேரூராட்சி தலைவர் அம்சவேணி செந்தில் குமார் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு மின்சாரவாரி யம்,நகராட்சி நிர்வாகம், பேரிடம் மேலாண்மை துறை, குடிநீர் வடிகால் வாய்துறை, வருவாய்த் துறை, காவல்துறை, வீட்டு வசதி துறை, சமூக நலன் மகளிர் துறை, பிற்ப டுத்தப்பட்டோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்நலத் துறை, தொழிலாளர் நலன், தமிழ்நாடு அமைப் புசாரா தொழிலாளர் நலத் துறை, வாழ்வாதார சிக்கன கடன் வழங்குதல் குறித்து அனைத்து துறைகளில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. முகாமில் செயல் அலுவலர் மனோகரன், தலைமை எழுத்தர் வெங்கடேசன், ஆணையர்கள் உமாசங்கர்,சுப்பிரமணியன், மருத்துவ உதவி ஆய்வாளர் செந்தில்குமார்,கூட்டுறவு வங்கி மேலாளர் பத்மா, வருவாய் ஆய்வாளர் புஷ்பலதா, மண்டல வட்டாட்சியர் முருகன் /கிராம நிர்வாகி சேகர், காவல்உதவி ஆய்வாளர் ராஜா,சமூக நலன் கலையரசி, சர்வகலா,மற்றும் அனைத்து நிர்வாக அலுவலர்களும் பணியாளர்களும் கலந்து கொண்டனர்.