கூடலூர் அருகே ஆண் காட்டு யானை உயிரிழப்பு
கூடலூர் அருகே ஆண் காட்டு யானை உயிரிழந்தது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-21 14:09 GMT
உயிரிழந்த காட்டு யானை
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள சேரம்பாடி வனச்சரகம் சப்பந்தோடு பகுதியில் வனபணியாளர்கள் களத்தணிக்கையின் போது சப்பந்தோடு ஆற்றில் ஆண் யானை ஒன்று இறந்து கிடப்பதை கண்டுப்பிடிக்கப்பட்டது. உடனே மாவட்ட வன அலுவலர் மற்றும் உதவி வனப்பாதுகாவலர் அவர்களுக்கு மேல் நடவடிக்கையின் பொருட்டு தகவல் தெரிவிக்கப்பட்டு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் இன்று மதியம் வனக்கால்நடை மருத்துவர் முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் அரசு உதவி கால்நடை மருத்துவர் சேரம்பாடி ஆகியோரால் இறந்த ஆண் யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஆண் யானையின் உடற்கூறு மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்ப உடற்கூறு மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. யானை இறப்பு குறித்து வனத்துறை விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.