கர்நாடக மாநில மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்தவர் கைது

நல்லம்பள்ளி அருகே கர்நாடக மாநில மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்த முதியவரை கைது செய்த காவல்துறையினர் 55 மதுபாட்டிலகளை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-23 01:43 GMT

கர்நாடக மாநில மதுபானங்களை பதுக்கி விற்பனை செய்தவர் கைது

தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நல்லம்பள்ளி அருகே நூலஅள்ளி கிராமத்தில் கர்நாடகா மாநில மதுபாட்டில்கள் பதுக்கி விற்பதாக அதியமான் கோட்டை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு சென்ற அதியமான் கோட்டை காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர்.

அப்போது அதே ஊரை சேர்ந்த மாணிக்கம் வீட்டில் கர்நாடக மாநில மதுபாட்டில்கள் பதுக்கி விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள 55 கர்நாடக மாநில மதுபாட்டில்களை அதியமான்கோட்டை காவல்துறையினர் பறிமுதல் செய்ததுடன் மாணிக்கத்தை கைது செய்தனர்.

Tags:    

Similar News