தஞ்சாவூர் பெரிய கோயிலை ட்ரோன் மூலம் படம் பிடித்த நபர் கைது

தஞ்சாவூர் பெரிய கோயிலை ட்ரோன் மூலம் படம் பிடித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-04-19 15:42 GMT

பைல் படம்

தஞ்சாவூர் பெரிய கோயிலை அனுமதியின்றி ட்ரோன் மூலம் படம் பிடித்தவரை காவல்துறையினர் கைது செய்தனர். உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலின் மேல் பாதுகாப்பு காரணங்களுக்காக ட்ரோன் கேமராக்கள் மூலம் படம் எடுக்க இந்திய தொல்பொருள் துறையினர் தடை விதித்துள்ளனர்.

இந்நிலையில், தஞ்சாவூர் பெரிய கோயில் கோபுரத்தின் தென்பகுதியில், புதன்கிழமை மாலை ட்ரோன் கேமரா ஒன்று பறந்து கொண்டிருந்தது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தஞ்சாவூர் மேற்கு காவல் நிலைய தலைமைக் காவலர் பாக்கியலட்சுமி, ட்ரோன் கேமரா மூலம் படம் எடுத்தவரை பிடித்து விசாரித்தார். விசாரணையில், அவர் தொல்பொருள் துறை அதிகாரிகளிடம் எவ்வித அனுமதியும் பெறாமல் படம் எடுத்ததும், அந்நபர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த அருண்பிரசாத் (26) என்பதும் தெரியவந்தது.

இதையடுத்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள ட்ரோன் கேமரா மற்றும் அதற்குரிய கருவிகளை பறிமுதல் செய்த காவல்துறையினர, அவரை கைது செய்து, சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

Tags:    

Similar News