பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை
திருச்சி மாவட்டம், தெற்கு சொரியாம்பட்டியில் வேலைக்கு செல்லாததை பெற்றோர் கண்டித்ததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே எம்.புதுப்பட்டி,தெற்கு சொரியாம்பட்டியைச் சேர்ந்தவர் 19 வயதான விக்னேஷ். இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார்.தற்போது விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தவர் அதன் பிறகு திருப்பூருக்கு செல்லாமல் வருமானமின்றி கிராமத்திலேயே இருந்துள்ளார்.
இதனை அவரது பெற்றோர்கள் கண்டித்துள்ளனர் இதனால் மனமுடைந்த இளைஞர் வீட்டில் கயிற்றால் தூக்கிட்டு கொண்டார். இதனைக்கண்ட அவரது பெற்றோர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக முசிறி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி பரிதமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.