கணவன் தற்கொலை - மனைவி புகார்
விருதுநகர் மாவட்டம்,பெரியவள்ளி குளம பகுதியில் குடிப்பழக்கத்தை மனைவி கண்டித்ததால் கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விருதுநகர் பெரியவள்ளிக்குளம் பகுதியைச் சார்ந்தவர் முத்துலட்சுமி அவருடைய கணவர் பச்சை மால் பச்சைமால் தமிழ்நாடு மின்சாரத்துறை ஸ்டேஷனில் லைன் இன்ஸ்பெக்டராக கடந்த இரண்டு வருடங்களாக வேலை பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால் இவருடைய மனைவி இவரை அடிக்கடி சத்தம் போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து தன்னை திட்டினால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என பச்சைமால் மனைவியிடம் அடிக்கடி கூறி வந்ததாகவும் இதை அடுத்து கடந்த 25ஆம் தேதி பச்சைமால் வேலைக்கு சென்றதாகவும் சாப்பிட வராமல் இருந்ததால் அவருக்கு உணவு கொடுக்க தெரிந்த நபரை அனுப்பியதாக கூறப்படுகிறது.
உணவு கொண்டு சென்ற நபர் பச்சைமால் பெரியவள்ளிகுளம் ஈபி சப்சேஷன் அருகே உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறியுள்ளார். சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த பொழுது பச்சைமால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
அவருடைய உடலை மீட்ட நபர்கள் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து சூலக்கரை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.