மணல் திருட்டில் ஈடுபட்டவர் கைது - வாகனம் பறிமுதல்
கீழ்வேளூர் அருகே கடுவை ஆற்றில் அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தவரை கைது செய்த போலீசார் மினி வேனை பறிமுதல் செய்தனர்.;
Update: 2024-02-26 03:12 GMT
பறிமுதல் செய்யப்பட்ட வேன்
நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த காக்கழனியில் கடுவை ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக கீழ்வேளூர் போலீஸ்சாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதையடுத்து அங்கு சென்ற கீழ்வேளூர் பேலீஸ்சார் விக்னேஷ், மாஸ்கோ, வினோத், ஆகியோர் சோதனையில் ஈடுப்பட்டப் போது மினி லோடு வேனில் கடுவையாற்றில் இருந்து அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணல் ஏற்றி வந்த மினி லோடு வேனை பறிமுதல் செய்து டிரைவரான காக்கழனி ஜீவா தெருவை சேர்ந்த சண்முகம் மகன் ஆனந்த் பாபு (30) என்பரை கைது செய்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்