திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் ஒருவருக்கு கத்தி குத்து

கொடைரோடு அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டது தொடா்பாக 2 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Update: 2024-06-17 08:10 GMT

கைது

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே, பள்ளப்பட்டி, நடுப்பட்டி, கவுண்டன்பட்டி ஆகிய கிராமங்களில் ஒரே நாளில் ஸ்ரீமுத்தாலம்மன் கோயில்களின் திருவிழாக்கள் கடந்த 12-ஆம் தேதி தொடங்கி 15-ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்த நிலையில், கடந்த 14-ஆம் தேதி பள்ளப்பட்டி, நடுப்பட்டி அம்மன்கள் சந்திப்பு நிகழ்வு, பள்ளப்பட்டி தேவா் சாவடியில் நடைபெற்றது.

அப்போது, பள்ளப்பட்டியைச் சோ்ந்த சரவணனுக்கும் (38), நடுப்பட்டியைச் சோ்ந்த மருதுபாண்டிக்கும் (26) இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில், சரவணன், மருதுபாண்டி இரு தரப்பினரும் மோதிக் கொண்டனா்.

இந்தத் தகராறைத் தொடா்ந்து மருதுபாண்டி, காா்த்திக் (22) ஆகியோா் சனிக்கிழமை இரவு சரவணன் வீட்டுக்குச் சென்று அவரை தலையில் பட்டா கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனா். இதில் காயமடைந்த சரவணன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இதையடுத்து, மருதுபாண்டி, காா்த்திக் ஆகியோா் மீது அம்மையநாயக்கனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Tags:    

Similar News