கோயில் கருவறை கேட்டை உடைத்து ரூ.40 ஆயிரம் திருட்டு

சிறுகனூர் அருகே தழுதாளபப்பட்டியில் உள்ள மதுரை வீரன் கோயில் கருவறையின் கேட்டை உடைத்து உள்ளே இருந்த உண்டியலிலிருந்த ரூ. 40 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2024-03-20 04:06 GMT

காவல் நிலையம் 

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே தழுதாளப்பட்டியில் மதுரை வீரன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் லால்குடி அருகே புதூர் உத்தமனூர் தென்னைமர சோலை தெருவை சேர்ந்த 39 வயதான வினோத்குமார் பூசாரியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 16ஆம் தேதியிலிருந்து 17 ஆம் தேதிக்குள் கோயிலுக்கு வந்த மர்ம நபர்கள் கோயில் கருவறையின் கேட்டை உடைத்து உள்ளே உண்டியலில் இருந்த ரூ. 40 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர் இந்நிலையில் நேற்று கோயிலுக்கு வந்த பூசாரி வினோத்குமார் கோவில் கேட் உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வினோத்குமார் சிறுகனூர் காவல் நிலையத்தில் நேற்று புகார் கொடுத்தார். புகாரின் பேரில் சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News