கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த மண்டலாபிஷேக விழா !
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த மண்டலாபிஷேக விழா நடந்தது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-12 07:22 GMT
கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில்
சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நடந்த மண்டலாபிஷேக விழா நடந்தது. இக்கோவில் கும்பாபிேஷகம் நடந்து முடிந்ததைத் தொடர்ந்து மண்டலாபிேஷகம் நடைபெற்று வருகிறது. நேற்று 18ம் நாள் விழாவையொட்டி, மூலவர் அம்மன் வீணையுடன் கலைவாணி அலங்காரத்தில் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து 24 சுமங்கலிகளுக்கு பாத பூஜைகள் செய்து வாசவி வனிதா சங்க உறுப்பினர்கள் ஆசி பெற்றனர். ஆர்ய வைசிய சமூக மக்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். சங்க நிர்வாக தலைவர் ரவீந்திரன், கும்பாபிஷேக விழா குழு தலைவர் அரவிந்தன் மற்றும் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.