மந்திவலசை பத்திரகாளி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ராமநாதபுரம் மாவட்டம், மந்திவலசை பத்திரகாளி அம்மன் கோவிலில் நடைபெற்ற மகா கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-02-11 11:03 GMT

கும்பாபிஷேகம்

ராமநாதபுரம், பரமக்குடி அருகே மந்திவலசை பத்திரகாளி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. பிப்ரவரி 9ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேகம் தொடங்கியது. தொடர்ந்து இரு தினங்களுக்கு யாகங்கள் நடைபெற்று இன்று அதிகாலை மங்கள இசையுடன் நான்காம் யாகசாலை நிறைவுற்று மகாபூர்ணாகுதி தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

பின்னர் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க கலசங்களுடன் புனித நீர் எடுத்து வரப்பட்டு கோயில் கும்பத்தில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்த கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News