மணிநகர் முனிய சுவாமி கோவில் கொடை விழா

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மணிநகர் முனிய சுவாமி கோவில் கொடை விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Update: 2024-05-06 04:37 GMT

மணிநகர் முனிய சுவாமி கோவில் கொடை விழா

தூத்துக்குடி மாவட்டம், நாசரேத் மணிநகர் அருள்மிகு முனிய சுவாமி கோவில் கொடை விழா கடந்த வியாழன்று துவங்கி யது. மதியம் அன்னதானமும், மாலை திருவிளக்கு பூஜையும் இரவு வில்லிசையும் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை முக்கடல் சங்கமத்திலிருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு ஹோமம் வளர்த்து புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பிறகு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதிய பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரசனம் செய்தனர்.

இதனை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு 10 மணியளவில் கும்பம், கரகாட்டம் நடந்தது. 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாம பூஜை நடைபெற்றது. சனிக்கிழமை காலையில் வரிதாரர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டு கோவில்கொடை விழா நிறைவுபெற்றது.விழாஏற்பாடு களை மணிநகர் முனிய சுவாமி கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News